திருவாரூரில் ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 9 வயது சிறுவனை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டவர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் அருகே கோமல் ராதாநஞ்சை பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். அன்பழகன் இறந்து விட்டார். ஜெயலட்சுமியின் கடைசி மகன் வருணன்(வயது 9). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
சம்பவத்தன்று வீட்டில் மர்மமான முறையில் வருணன் தூக்கில் பிணமாக தொங்கினான். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் வருணனின் அண்ணன் முரளி புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சிங்காரு மகன் பாஸ்கர் (வயது 30) என்பவர் வீட்டில் தனியாக இருந்த வருணனிடம் தகாத முறையில் ஓரினச்சேர்க்கை உறவு வைத்துக்கொள்ள முயன்றதும், அதற்கு வருணன் மறுத்ததால் அவனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதையடுத்து பாஸ்கரை நேற்று கைது செய்த போலீசார் திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
No comments:
Post a Comment