சீன இணைய தளங்களில், பாலியல் தொழிலாளர் பற்றிய பரபரப்பான ஒரு வீடியோ காட்சி, வேகமாக பரவியது. இந்த வீடியோவில், கோட் சூட் அணிந்த பெண் ஒருவர், நிர்வாக அதிகாரி போன்று, பெண்களுக்கு பாடம் நடத்துகிறார். அதை, 15 முதல் 20 வயதுடைய இளம் பெண்கள் கவனிக்கின்றனர். முதலில் இதை பார்த்தவர்கள், அந்த பெண், மேலாண்மை பாடம் எதையோ நடத்துகிறார் என எண்ணினர். பின், அதில் இடம் பெற்ற உரையாடல்களை கேட்டதும், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். கோட் சூட் அணிந்து, கல்லூரி பேராசிரியை போல் பேசும் அந்த பெண், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் தங்கள் வருமானத்தை எவ்வாறு அதிரித்துக் கொள்வது என பேசத் துவங்கினார். பின், வாடிக்கையாளர்களை கவரவும், தொடர்ந்து அவர்களை தக்க வைத்துக் கொள்ளவும், ஒப்பனை செய்து கொள்ளும் முறை குறித்தும், அவர் பல்வேறு, 'டிப்ஸ்'களை வழங்கினார். அப்போது, அங்குள்ள திரையில், பவர்பாயின்ட் பிரசன்டேஷனில், ஒரு பெண் தோன்றினார். அந்தப் பெண்ணை சுட்டிக் காட்டி, 'அவரைப் போல, கண்ணைக் கவரும் வகையிலான, கவர்ச்சிகரமான உடை அணிய வேண்டும்; இதன் மூலம், பணக்கார வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளலாம்' என்ற அவர், 'இது போன்ற பல வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்' என்றார். இணையதளத்தில் இதைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். சீனாவில், சட்ட விரோதமான முறையில், பாலியல் தொழில் பெருகி வருவதாக குற்றம் சாட்டிய சிலர், 'அரசு இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்து உள்ளனர். செயற்கை முறையில் பாலியல் அனுபவத்தை பெறும் வகையிலான, பாலியல் பொம்மைகள் தயாரிப்பதில், உலக அளவில் சீனா முன்னிலை வகிக்கிறது. உலகின் மொத்த தயாரிப்பில், 70 சதவீதம் பொம்மைகள் சீனாவில் தயாரிக்கப்பட்டு, பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது செக்ஸ் தொழிலாளர்கள், தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்வது குறித்த, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது அம்பலமாகியுள்ளது. இதனால், சீன மக்கள் கவலை அடைந்து உள்ளனர்
No comments:
Post a Comment