ஜேர்மனியில் வேலைத் தேடி விரக்தி அடைந்த நபர், ஊழியரை சுத்தியலால் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜேர்மனியை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நீண்ட காலமாக வேலையில்லாமல் இருந்துள்ளார்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தும், தனக்கு பொருத்தமே இல்லாத வேலைகளை வழங்கியதால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 15ம் திகதி லீப்ஜிக் என்ற இடத்திலுள்ள வேலைவாய்ப்பு மையத்திற்கு சென்றவர், கடும் கோபத்தில் அங்கிருந்த பெண் ஊழியரை சுத்தியலால் தாக்கியுள்ளார்.
இருப்பினும் பெண் ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த நபரை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, குறித்த நபர் பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்(Personality Disorder) என்ற மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஆயுட் கால தண்டனைக்கு பதிலாக, 13 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஜேகன்லாப் உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment