Friday, 15 November 2013

ஜாதகத்தில் கண்டத்தில்' தப்பிக்க மனைவி கொலை : 70 வயதில் கனவில் வந்த "கடவுள்




காரைக்குடி: ஜாதகத்தில், "கண்டம்' இருப்பதாக நினைத்து, காரைக்குடியில், மனைவியை குத்திக் கொன்ற ஜோதிடர் தலைமறைவானார். காரைக்குடி என்.புதூரைச் சேர்ந்தவர், பரமசிவம், 70; இவரது மனைவி, நாகம்மாள், 60. இருவரும், 15 ஆண்டுகளாக பிரிந்து, வசித்து வந்தனர். இவர்களுக்கு இரு மகள், ஒரு மகன் உள்ளனர். பரமசிவம், ஜோதிடம் பார்ப்பதுடன், நெசவும் செய்து வந்தார். நாகம்மாள், வீட்டு வேலை செய்து வந்தார். நேற்று காலை, 6:00 மணிக்கு, வேலைக்கு சென்ற நாகம்மாளை, பின் தொடர்ந்த பரமசிவம், அவரின் 
மார்பில் கத்தியால் குத்தி தப்பினார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாகம்மாள் இறந்தார்.
போலீசார் கூறுகையில், "பரமசிவத்துக்கு, ஜாதகத்தில், "கண்டம்' இருப்பதாகவும், மனைவி இறந்தால், அதில் இருந்து தப்பித்து விடுவேன் எனவும் அப்பகுதியினரிடம் கூறியுள்ளார். மேலும், கனவில் வந்த கடவுள், "அவள் தொலைந்தால், நீ நன்றாக வாழலாம்' என, கூறியதாகவும் புலம்பியுள்ளார். பரமசிவத்தை தேடி வருகிறோம்' என்றனர்.

No comments:

Post a Comment