Sunday, 10 November 2013

பான்பராக் போடக்கூடாது: புகை பிடித்தால் அரசு வேலை இல்லை- ராஜஸ்தான் அரசு உத்தரவு

பான்பராக் போடக்கூடாது: புகை பிடித்தால் அரசு வேலை இல்லை- ராஜஸ்தான் அரசு உத்தரவு
ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 1–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 5–ந்தேதி நடைமுறைக்கு வந்தன.
ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியானது. இதனால் ஆளும் காங்கிரஸ் கட்சி மக்களை கவரும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு ஒருநாள் முன்பு காங்கிரஸ் அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. குட்கா, புகையிலை பயன் படுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அரசு வேலையில் சேருபவர்கள் புகை பிடிக்க மாட்டேன், குட்கா பயன்படுத்த மாட்டேன் என்ற உறுதிமொழியை தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை அனைத்துத் துறைகள், கலெக்டர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் இதை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் அரசுப் பணிகளில் சேரும் இளைஞர்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க முடியும் என்று கருதப்படுகிறது.
ராஜஸ்தான் மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு புகையிலை எதிர்ப்பாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment