அமெரிக்காவை சேர்ந்த ஒரு விளம்பர நிறுவனம், அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் இஸ்லாமிய பெண் ஒருவரை அணைத்தபடி இருக்கும் காட்சியை அதன் விளம்பரத்திற்கு பயன்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு விளம்பர நிறுவனம், குறட்டை பிரச்சனையால் பாதிக்கபட்டிருப்பவர்களுக்கு உதவும் 'SnoreStop sleep aids'என்னும் பொருளுக்கான விளம்பரத்தில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் இஸ்லாமிய பெண் ஒருவரை அணைத்தபடி இருக்கும் காட்சியை பயன்படுத்தியுள்ளதுஅந்த விளம்பரத்தில் "Keeping you together" என்னும் வாக்கியத்தை பிரதானப்படுத்தும் விதத்தில், அமெரிக்க ராணுவ வீரர் இஸ்லாமிய பெண் ஒருவரை அணைத்தபடி இருக்கிறார். அந்த இஸ்லாமிய பெண்ணின் கையில் திருமண மோதிரம் உள்ளது.
பார்க்க சற்று சுவாரசியமாக இருந்தாலும் இந்த விளம்பரத்திற்கு எதிராக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகையில் விளக்கமளித்துள்ள நிறுவனம், குறட்டை பிரச்சனையால் தம்பதிகள் பிரியாமல் இருக்க இந்த பொருள் பயன்படும் என்பதே விளம்பரத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை நிஜ வாழ்க்கையில் சேர்ந்து வாழும் ஒரு தம்பதியை பார்த்தப்போது எங்களுக்கு தோன்றியது.
இந்த விளம்பரத்தால் எந்த தவறான கருத்தையும் நாங்கள் சொல்ல முயலவில்லை. சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இந்த விளம்பரத்தை அமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் சபை பாராட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இந்த விளம்பர பலகைகள் சான் டீகோ, ஹுஸ்டன், சால்ட் லேக் சிட்டி, நியூ யார்க் மற்றும் மேலும் பல இடங்களில் வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment