Friday, 15 November 2013

சவுதி அரேபியாவில் இருந்து புறப்பட்டபோது மும்பை விமானத்தின் கதவு மூடப்படாததால் நடுவானில் பீதி


சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் இருந்து ஐதராபாத் வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது. 380 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் அந்த போயிங் 747 ரக ஜம்போ விமானம், ஜெட்டாவில் இருந்து புறப்பட்டது. நடுவானை அடைந்தபோது, விமானத்தின் ஒரு கதவு சரியாக மூடப்படாததை எச்சரிக்கை விளக்கு ஒளிர்ந்து உணர்த்தியது. இதனால் நடுவானில் பீதி ஏற்பட்டது.
இதையடுத்து, விமானி அவசர அவசரமாக விமானத்தை ஜெட்டாவுக்கே திருப்பினார். அங்கு விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. என்ஜினீயர்கள் கோளாறை சரி செய்தனர். பிறகு 2 மணி நேரம் தாமதமாக விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.
விமானிகள் மற்றும் சிப்பந்திகளின் பணி நேரம் முடிவடைய இருந்ததால், ஐதராபாத்துக்கு செல்லாமல் நேரடியாக மும்பைக்கு விமானம் சென்றது. ஐதராபாத் செல்ல வேண்டிய பயணிகள் வேறு விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.

No comments:

Post a Comment