எந்த ஒரு பொருளை வாங்கவோ, விற்கவோ தற்போது சுலப சாதனம் இணையதளம் ஆகும். பிரேசில் நாட்டில் ஒரு பெண் இணையதளம் மூலம் தனது குழந்தையை ரூ.27 ஆயிரத்திற்கு ஏலம் விட்டார். அதற்கு அந்த கல்நெஞ்ச தாய் குறிப்பிட்ட காரணம் மிகவும் விசித்திரமானது. அதில், குழந்தை அழுது கூச்சல் போட்டு அதிக தொல்லை கொடுக்கிறது. என்னால் தூங்க கூட முடியவில்லை. வேலைக்கு செல்ல இயலவில்லை என்ற வாசகங்களை கூறி குழந்தையின் அழகி படத்தையும் வெளியிட்டார்.
இது வர்த்தக விதிமுறையை மீறிய செயல் என்பதால் இணையதள நிர்வாகிகள் அதை 24 மணி நேரத்திலேயே அகற்றி விட்டார்கள். ஆனாலும் போலீசாருக்கும், குழந்தைகள் நல அமைப்புக்கும் ஏராளமான புகார்கள் பறந்தன. பெண் வெளியிட்ட முகவரியை வைத்து போலீசார் தேடிய போது வீடு பூட்டிக் கிடந்தது. டெலிபோன் தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டது. இந்த விரக்தி தாய் யார்? என்பதை கண்டுபிடிப்பதில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment