Monday, 18 November 2013

மகளின் உயிரை பறித்த தந்தையின் கள்ளத்தொடர்பு


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில், தந்தையின் கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட பிரச்னையால், 3 வயது மகள் கொலை செய்து எரிக்கப்பட்டாள். கொலை செய்த கள்ளகாதலியை, கணவருடன் போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் சங்கர், 35. தனியார் பள்ளியில் பஸ் கண்டக்டராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி செல்வி, 28. இவர்களுக்கு, தீபக் கருப்பசாமி,6, இந்து காவ்யா ,3, என இரு குழந்தைகள் இருந்தனர். சங்கரின் வீட்டருகே வசிப்பவர் அகிலா,28. சங்கருக்கும் அகிலாவிற்கும் தொடர்பு ஏற்பட்டது. இதனால் அகிலா, செல்வி இடையே, தகராறு ஏற்பட்டது. சங்கர், அகிலாவின் தொடர்பை துண்டித்துக்கொண்டார். சில நாட்களுக்கு முன், மீண்டும் செல்விக்கும், அகிலாவிற்கும் சண்டை ஏற்பட்டது. செல்விக்கு ஆதரவாக சங்கர், அகிலாவிடம் சண்டை போட்டு, அவதூறாக பேசினார். இதனால் சங்கர் மீது அகிலா கடும் கோபம் கொண்டார். கடந்த 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு, வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த இந்து காவ்யாவை, வீட்டிற்கு தூக்கி வந்த அகிலா, முகத்தில் தலையணையை அமுக்கி, கொலை செய்தார். அதை கணவர் நாகராஜிடம், போனில் தெரிவித்தார். இரவு 10.30 மணிக்கு நாகராஜ், தான் ஓட்டும் மினி வேனில் குழந்தை பிணத்தை மூடையில் கட்டி ஏற்றி, அகிலாவையும் அழைத்து கொண்டு, பூவாணி கடலை பண்ணை ரோட்டிற்கு சென்றார். அங்கு கால்வாயில், குழந்தையின் உடலை பெட்ரோல், டீசல் கலவையை ஊற்றி எரித்தனர். அவர்கள் திரும்பிய சிறிது நேரத்தில், அப்பகுதியில் மழை பெய்ததால் , சிறுமியின் உடல், முழுவதும் எரியாத நிலையில் கிடந்தது. போலீசார் கண்டு பிடிக்காமல் இருக்க, வீட்டிலும் , குழந்தையை எரித்த இடத்திலும், மிளகாய்பொடியை தூவி உள்ளனர். கணவன், மனைவி இருவரையும், கிருஷ்ணன்கோவில் போலீசார் கைதுசெய்தனர். அகிலா திருச்சி சிறையிலும், நாகராஜ் மதுரை சிறையிலும் 
அடைக்கப்பட்டனர். கொலையை மறைக்க, இருவருக்கும், ஒருவர் ஆலோசனை வழங்கி உள்ளார். அவர் குறித்தும், போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment