Tuesday, 5 November 2013

காதலித்து ஓடிப்போவதை தவிர்க்க குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை போதியுங்கள்: பெற்றோர்களுக்கு நீதிமன்றம் அறிவுரை

காதலித்து ஓடிப்போவதை தவிர்க்க குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை போதியுங்கள்: பெற்றோர்களுக்கு நீதிமன்றம் அறிவுரை
பக்குவமடையாத வயதில் உருவாகும் காதல் காரணமாக, இளம் ஜோடிகள் ஊரைவிட்டு ஓடிப்போவதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவர்கள் தங்களின் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதும், சில சமயங்களில் பிரச்சினையில் சிக்கி கொலை செய்யப்படுவதும் உண்டு. நாட்டில் நடைபெறும் கவுரவக் கொலைகள் பெரும்பாலும் காதல் திருமணங்களால்தான் ஏற்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க, தங்கள் குழந்தைகளை பொறுப்புள்ள பிள்ளைகளாக வளர்க்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியில் வசித்த பீகாரை சேர்ந்த ஒரு பெண், தனது 13 வயது மகளை காணவில்லை என்று கடந்த 2010-ம் ஆண்டு போலீசில் புகார் தெரிவித்தார். பின்னர் பீகாரில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த சிறுமி, தனக்கு 18 வயது ஆகிவிட்டது என்றும் எனது விருப்பப்படியே நான் காதலனுடன் ஓடினேன் என்று கூறினார். மேலும் வெவ்வேறு மதத்தை சேர்ந்த எங்களை பிரிக்க பார்ப்பதாகவும் அந்த சிறுமி பெற்றோர்கள் மீது குறை கூறினாள். 

ஆனால், சிறுமியை மீட்டபோது அந்த சிறுமி கர்ப்பமடைந்து இருந்ததால், அவளது தாயார், தனது மகளை கடத்தி கற்பழித்து விட்டார் என்று போலீசில் காதலன் மீது புகார் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட காதலனை போலீசார், நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி விரேந்தர் பட் கூறியதாவது:-

இன்றைய காலகட்டத்தில், இங்கே, மொபைல் போன்கள், இன்டர்நெட், கேபிள் டிவி என பல்வேறு வசதிகளை நமது வீடுகளில் பயன்படுத்தி வருகின்றோம். இந்நிலையில், பெற்றோர்கள் தான், தனது பிள்ளைகளுக்கு சமுதாய ஒழுக்க நெறிமுறைகளையும் நீதிக் கல்வியையும் கற்பிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர். 

ஏனெனில், அப்போதுதான் அவர்கள் அந்த நெறிமுறைகளின் படி நல்லது, கெட்டது மற்றும் கவர்ச்சி எது என்பது பற்றி தெரிந்துகொண்டு நடந்துகொள்ள ஏதுவாக இருப்பார்கள். கவர்ச்சியாக தெரிவது எல்லாம் எப்பொழுதும் நல்லதாக இருக்கவில்லை என்பதை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். போதிக்க வேண்டும். 

நல்லது தரக்கூடிய விசயங்களுக்கு மதிப்பளித்து அதன்படி நடப்பது நல்லது. தவறான கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதால், காதலனோடு ஓடிப்போவது, ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வது போன்ற மோசமான நிலையை குறைக்க முடியாது. 

பாலிய பருவ சிறுவர்களின் நடவடிக்கையை கண்காணிப்பது, அவர்களிடத்தில் நல்லொழுக்க நெறிமுறை கல்வியை போதிப்பது நல்ல விளைவுகளை கொடுக்கும். எனவே எந்த குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாத காதலனை சில முடிவுகளின் பேரில் விடுவிக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.  

No comments:

Post a Comment