நாகப்பட்டினம்: நாகை அருகே, அரசு உதவி பெறும் பள்ளியில், மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு, பொது மக்கள் தர்ம அடி கொடுத்தனர். நாகை அடுத்த நாகூரைச் சேர்ந்தவர் பாத்திமா பர்வீன், 12, . (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நாகூரில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பாத்திமா, 'பள்ளிக்கு செல்ல முடியாது' என, கூறியுள்ளார். விசாரித்ததில், பள்ளியின் கம்ப்யூட்டர் ஆசிரியர் செல்வராஜ், 40, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று, தலைமையாசிரியர் ஜெகபர் சாதிக்கிடம் நடந்த சம்பவத்தை கூறினர். பாத்திமாவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வகுப்பறையில் இருந்த செல்வராஜை சுற்றி வளைத்து சரமாரியாகத் தாக்கினர். தகவலறிந்து பள்ளிக்கு வந்த போலீசார், ஆசிரியரை கைது செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
Tuesday, 5 November 2013
சிறுமியிடம் 'சில்மிஷம்': ஆசிரியருக்கு தர்ம அடி

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment