மோடி உத்தரவின் பேரில்-இளம்பெண்ணை உளவு பார்த்த விவகாரத்தில் சர்ச்சை
நரேந்திர மோடி உத்தரவின் பேரில் இளம் பெண்ணை உளவு பார்த்த விவகாரத்தில் விசாரணை கோர காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை என்று பா.ஜனதா கூறி இருக்கிறது.
உளவு பார்த்த விவகாரம்
குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா மந்திரிசபையில் உள்துறை மந்திரியாக பதவி வகித்தவர், அமித்ஷா. நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான அமித்ஷா தற்போது பா.ஜனதா பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
அவர் மந்திரி பதவி வகித்தபோது முதல்-மந்திரி நரேந்திர மோடி உத்தரவின் பேரில் இளம்பெண் ஒருவரை கண்காணித்து உளவு பார்க்க போலீசாருக்கு உத்தரவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து இணையதள புலனாய்வு பத்திரிகை சார்பில் சி.டி. ஒன்றும் வெளியிடப்பட்டது.
விசாரணை நடத்த கோரிக்கை
உளவு பார்த்த விவகாரம் குறித்து ஐ.பி.எஸ். அதிகாரி ஜி.எல்.சிங்காலுக்கும், அமித்ஷாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் அந்த சி.டி.யில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே ‘சொராபுதீன் என்கவுண்டர்’ வழக்கில் கைதான போலீஸ் அதிகாரி சிங்கால் தற்போது ஜாமீனில் விடுதலை ஆகி இருக்கிறார்.
இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் அது குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், நரேந்திர மோடியை பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை திரும்பப்பெற வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறது.
No comments:
Post a Comment