Wednesday, 20 November 2013

பள்ளி மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர்



மாணவனை பிரம்பால் அடித்து காயப்படுத்திய ஆசிரியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4-ம் வகுப்பு மாணவன்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேலஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். அவரது மனைவி முனியம்மாள். இவர்களது மகன் நவீன் (வயது 8). பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று முன்தினம் மாணவன் நவீன் வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தபோது பக்கத்து வகுப்பில் இருந்த ஆசிரியர் கலையரசன் சில மாணவர்களை பிரம்பால் அடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த நவீன் தனது வகுப்புக்கு சென்று சகமாணவர்களிடம் கூறினான்.
பிரம்பால் சரமாரி அடி
இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் கலையரசன், மாணவன் நவீனை பிரம்பால் முதுகில் சரமாரியாக அடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. வலி தாங்கமுடியாமல் அலறித்துடித்த மாணவன், வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறினான். பதறிப்போன பெற்றோர் மாணவனை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment