Tuesday, 5 November 2013

காதலனுடன் ஓடிப்போன மகளை கற்பழித்து கொன்ற காமக்கொடூர தந்தை

காதலனுடன் ஓடிப்போன மகளை கற்பழித்து கொன்ற காமக்கொடூர தந்தை கைது
காதல் திருமணம் செய்யும் பெண்களால் தங்கள் கவுரவம் பாதிக்கப்படுவதாக கூறி அவர்களை கவுரவக் கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு ஒழுக்கநெறியை போதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், மும்பை அருகே நடந்த கொடூரமான கவுரவக் கொலை சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கிழக்கு உத்தர பிரதேசத்தில் காசிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது காதலனுடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஊரைவிட்டு ஓடிவிட்டார். அவர்கள் இருவரும் மும்பையில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே மும்பைக்கு விரைந்த பெண்ணின் தந்தை, மகளை வீட்டிற்கு திரும்பி வரும்படி வற்புறுத்தியுள்ளார். 

வர மறுத்ததால் ஆத்திரமடைந்த தந்தை, தனது நண்பருடன் சேர்ந்து அந்த பெண்ணை அருகில் உள்ள காட்டுக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரது துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment