Tuesday, 19 November 2013

இலவச 'லேப்-டாப்' பெற சென்ற மாணவி: வேன் டிரைவரால் பாலியல் பலாத்காரம்


அமேதி: உத்தர பிரதேசத்தில், மாநில அரசின், இலவச லேப் - டாப்பை பெற்று, வீடு திரும்பிய மாணவி, பள்ளி வேன் டிரைவரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. முதல்வர் அகிலேஷ் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, இலவச லேப் - டாப் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். இதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், பிரமாண்ட விழா நடத்தி, லேப் - டாப்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், பைசாபாத்தில் உள்ள, தான்பாடா மயூர்யா மகளிர் பள்ளியில், இலவச லேப் - டாப் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. பல்வேறு கிராமங்களிலிருந்தும், லேப் - டாப் பெறுவதற்காக, ஆயிரக்கணக்கான மாணவியர் சென்றிருந்தனர். 'இந்த நிகழ்ச்சி, மதியம், 2:00 மணிக்கு துவங்கும்' என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான, மாநில அமைச்சர், அவதேஷ் பிரசாத், மாலை, 7:00 மணிக்கு வந்ததால், இரவு, 10:00 மணிக்கு தான், நிகழ்ச்சி முடிந்தது. இரவு அதிக நேரம் ஆனதால், பள்ளிகளின் சார்பில், மாணவ, மாணவியர், வீடு திரும்ப, வேன் ஏற்பாடு செய்யப்பட்டது. தொலை தூரத்திலிருந்து வந்திருந்த, 50 மாணவியர், வேனில் தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனைத்து மாணவியரையும் வீட்டில் இறக்கிவிட்ட வேன் டிரைவர், இறுதியாக, அமேதியை சேர்ந்த, 18 வயது மாணவியை, வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வழியில், வேனை நிறுத்தி, பாலியல் பலாத்காரம் செய்தார். பின், அந்த மாணவியை, சாலையில் வீசிவிட்டு தப்பிச் சென்றார். படுகாயங்களுடன் வீடு திரும்பிய மாணவி, பெற்றோரின் உதவியுடன் போலீசில் புகார் அளித்தார். பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவரை, போலீசார் கைது செய்தனர். காங்., துணைத் தலைவர் ராகுலின் சொந்த தொகுதியான, அமேதியை சேர்ந்த மாணவி, அரசு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்புகையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

No comments:

Post a Comment