மும்பை: பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், ஐந்து பேர், சக மாணவன் ஒருவனின் ஆடையை அவிழ்த்து, ஆடச் செய்து, அதை, மொபைல் போனில் படம் பிடித்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, ராகிங் செய்ததால், கைது செய்யப்பட்டு, சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.மும்பை, பெவாய்
பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஐந்து பேர், சகமாணவன் ஒருவனை, ராகிங் செய்வதற்காக, அருகில் உள்ள புதருக்கு கூட்டிச் சென்றனர். மொபைல் போனில் பாடலை இசைக்கச் செய்து, அந்தப் பாடலுக்கு ஏற்ப, அந்த மாணவனை, நிர்வாணமாக ஆடச் செய்து, அதை, மொபைல் போனில் படமும் பிடித்துள்ளனர். பிறகு, அந்த காட்சிகளை, இணையத்தில் பதிவேற்றம் செய்தனர்.
கடந்த மாதம் நிகழ்ந்த இந்த சம்பவத்தின், வீடியோ காட்சிகளை, இணையதளத்தில் பார்த்தவர்கள், பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்; அவர்கள், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment