Tuesday, 5 November 2013

பாம்பு 'மசாஜ்': ரூ.2,500 கட்டணம் வசூல்


ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இயங்கும், பாம்பு மசாஜ் நிலையத்திற்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து உள்ளனர். இந்தோனேசிய தலைநகர், ஜகார்த்தாவில், மசாஜ் நிலையம், இயங்கி வருகிறது. பல்வேறு வகையான மசாஜ் சேவை, இங்கு அளிக்கப்படுகிறது. இதில், சமீபத்தில், பாம்பு மசாஜ் சேவை துவக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, மசாஜ் நிலைய நிர்வாகி கூறியதாவது: வாடிக்கையாளர்களுக்கு, மூன்று பாம்புகள் உதவியுடன், மசாஜ் செய்யப்படுகிறது. ஒன்றரை மணி நேரத்திற்கு, 2,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மலைபாம்புகளின், வாய் கட்டப்பட்ட நிலையில், இந்த மசாஜ் அளிக்கப்படுகிறது. மசாஜ் செய்பவர்களுக்கு, பாம்புகளால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள், பாம்பு மசாஜை அதிகம் விரும்புகின்றனர். பாம்புகள் மசாஜ் செய்யும் போது, இரண்டு பெண்கள் உதவிக்கு இருப்பர். மசாஜ் பாம்புகளுக்கு, உயிருள்ள முயல்கள் தீனியாக அளிக்கப்படுகின்றன. பாம்பிடம் பயம் கொண்டவர்களும், இதுபோன்ற மசாஜ் மூலம், பாம்பு பயத்தை போக்கி கொள்கின்றனர். இவ்வாறு, மசாஜ் நிலைய நிர்வாகி கூறினார். வழக்கம் போல, பிராணி நல இயக்கத்தினர், பாம்புகளை வைத்து மசாஜ் செய்வதற்கு கண்டன குரல் எழுப்பியுள்ளன

No comments:

Post a Comment