Wednesday, 18 December 2013

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கும், அமெரிக்க உளவு அமைப்பின் செயல்பாடு சட்டவிரோதமானது

அமெரிக்காவின் உளவு அமைப்பு (என்.எஸ்.ஏ.,). இந்த அமைப்பு, மக்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்பதாக, தகவல்கள் வெளியாயின. இதனால், அமெரிக்கர்களின் அடிப்படை சுதந்திரம் பறிக்கப்படுவதாக, அந்நாட்டை சேர்ந்த பொதுமக்கள், அதிருப்தி அடைந்து விமர்சித்தனர். இதுகுறித்து, விசாரித்த பெடரல் கோர்ட் நீதிபதி, "அரசின் இந்த செயல்பாடு தவறானது, அமெரிக்க அரசியல் சாசனத்திற்கு எதிரானது' எனக் கூறி தீர்ப்பளித்தார். அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடென்னை, அமெரிக்கா கைது செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்காவின் செயல்பாடுகளை, அந்நாட்டு கோர்ட் கண்டித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் இந்த உளவு அமைப்பு, பல்வேறு நாடுகளின் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டதற்காக, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கண்டனத்தை எதிர் கொண்டது.

No comments:

Post a Comment