பிற ஆண்களிடம் செக்ஸ் உறவு வைத்து கொண்ட ஆண்களிடம் இருந்து இரத்ததானம் பெற கனடாவின் சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.
கனடிய இரத்த சேவை மையத்தின் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி விவகார துணை தலைவர் டனா டேவின்(Dana Devine) அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் வான்கூவர் நகரத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கடந்த ஐந்து வருடங்களில் பிற ஆண்களிடம் செக்ஸ் வைத்த ஆண்களிடம் இருந்து ரத்ததானம் பெறுவதை தடை செய்வதாக அறிவித்தார்.
ஆண்களிடம் செக்ஸ் வைத்த ஆண், ரத்ததானம் செய்யும் உரிமையையும் இழக்கிறார் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விதியை மிகவும் தீவிரமாக கடைபிடிக்கும்படி கனடாவின் அனைத்து சுகாதார நிலையங்களையும், ரத்ததான மையங்களையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment