பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதில் இப்போதுள்ள முறையை மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.செள கான், எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு இது தொடர்பான மனுவை விசாரித்தனர். அவர்கள் கூறியது: பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் பெண்களை இப்போதுள்ள முறைப்படி மருத்துவப் பரிசோதனை செய்வது, அவர்களது, தனிஉரிமையை பாதிக்கும் செயலாக உள்ளது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மீண்டும் வேதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடும் பெண்கள் மீண்டும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படக் கூடாது. ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்ய இதைவிட சிறந்த மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினனர்
No comments:
Post a Comment