Tuesday, 28 May 2013

கேன்ஸ் பட விழாவில் 'லெஸ்பியன்' படத்துக்கு விருது

கேன்ஸ் பட விழாவில் 'லெஸ்பியன்' படத்துக்கு விருது
பிரான்ஸ் நாட்டில் `கேன்ஸ்' நகரில் சர்வதேச அளவில் சிறந்த படம், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு `கேன்ஸ்' விருது வழங்கப்படுகிறது. இது ஆஸ்கார் விருதுக்கு இணையாக கருதப்படுகிறது. இந்த விருது வழங்குவதற்காக `கேன்ஸ்' பட விழா பிரான்சில் நடந்தது. 

அதில் சர்வதேச அளவில் மிக சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் திரையிடப்பட்டன.அதில் `லெஸ்பியன்' (பெண் ஒரின சேர்க்கை) உறவை சித்தரிக்கும் `புளூ இஸ் தி வார்மஸ்ட் கலர்' என்ற படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதை ஆஸ்கார் விருது வென்ற டைரக்டர்கள் ஸ்டீவன் ஸ்டீல் பெர்க், நிக்கோல் கிட்மான், ஆங் லீ மற்றும் கிறிஸ்டோப் வால்ட்ஷ் உள்ளிட்ட டைரக்டர்கள் குழு தேர்வு செய்துள்ளது. 

எனவே, இப்படம் `கேன்ஸ்' விருது பெறுகிறது. இப்படத்தை பிரெஞ்ச் துனிசியன் இயக்குனர் அப்தெலாடிப் கெச்சிசே டைரக்டு செய்துள்ளார். ஒரு 15 வயது சிறுமி நடுத்தர வயது பெண் மீது வைத்திருக்கும் காதலை இப்படம் சித்தரிக்கிறது. அதில், நடுத்தர வயது பெண்ணாக அடெல் எஸ்சார் சோ போலசும், 15 வயது சிறுமியாக லீ சிடோசும் அற்புதமாக நடித்துள்ளனர். இப்படத்துடன் கோயன் பிரதர்ஸ் டார்க் காமெடி, பிளட்ஸ் ஸ்பார்ட்டர்டு கிரிடிக் ஆப் சைனீஸ் சொசைட்டி உள்ளிட்ட பல படங்கள் கேன்ஸ் விருது போட்டியில் இடம் பெற்றிருந்தன.

No comments:

Post a Comment