கள்ளக்காதலியை ரகசியமாக சந்திக்க காதலன் சென்ற போது படுக்கை அறை கதவை பூட்டியதால் தப்பிக்க கடும் போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டது. பிரேசில் நாட்டிலுள்ள சாவோ போலோ நகரில் இச்சம்பவம் அரங்கேறியது. அங்கு வசிக்கும் திருமணம் ஆன பெண்ணுக்கு கள்ளக்காதலன் இருந்தான். கணவர் வெளியே சென்றதும் காதலன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். ஆனால் கணவரோ சீக்கிரமே திரும்பிய போது மனைவியின் தோற்றத்தை பால்கனியின் வழியாக பார்த்து அவருக்கு ஆவேசம் ஏற்பட்டது. வேகமாக சென்று படுக்கை அறை கதவை பூட்டி வைத்தார்.
இதனால் கள்ளக்காதல் ஜோடி தப்பிக்க வழி இன்றி போராடினர். இந்த வீடு 3–வது மாடியில் இருக்கிறது. எனவே எளிதாக தப்பி ஓட வழியில்லை. பிறகு பெட்சீட்டுகளை கயிறு போன்று திரித்து கள்ளக்காதலன் அதை பிடித்துக்கொண்டு ஜன்னல் வழியாக இறங்கினார். ஆனால் ஒரு மாடி வரைக்குமே அவரால் இறங்க முடிந்தது. அந்தரத்தில் தொங்கியபடி தவித்தார். அப்போது அங்கு வேறுபணிக்காக வந்து தீயணைப்பு படையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.
இந்த காட்சியை ஒருவர் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட, இந்த சுவாரசிய காட்சியை இரண்டே நாளில் 9½ லட்சம் பேர் கண்டு ரசித்தனர்.
No comments:
Post a Comment