ஆமதாபாத்: குஜராத்தில், பிரபல மடம் ஒன்றின் சாமியார், விபசார பெண்ணுடன் லீலைகளில் ஈடுபடும் காட்சிகளை, ரகசியமாக படம் பிடித்து, பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.தலைநகர், காந்திநகர் அருகே உள்ள சைஜ் என்ற கிராமத்தில் செயல்படுகிறது, பிரபலமான, விஸ்வமங்கள சுவாமி நாராயண் குருகுலம். இந்த ஆசிரமத்தில் தங்கியுள்ள, பல சன்னியாசிகளில் ஒருவர், சுவாமி நீலகண்டதாஸ்ஜீ.விபசார புரோக்கர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த நீலகண்டதாஸ்ஜீ, வாரம் தோறும், 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து, பெண்களுடன் உல்லாசமாக இருப்பது வழக்கமாம். அவ்வாறு, உல்லாசமாக இருந்த பெண்களில் ஒருவர் கடந்த மார்ச், 20ம் தேதி, ரகசியமாக, மொபைல் போனில், சாமியாரின் லீலைகளை படம் பிடித்துள்ளார்.
இதைக் காட்டி, சாமியாரை, விபசார கும்பல் மிரட்டி வந்துள்ளது. சாமியார் நீலகண்டதாஸ்ஜீ பணம் கொடுக்க மறுக்கவே, தலைமை குருவிடம், ரகசிய காட்சிகளை காட்டி, பணம் கேட்டது.அவர்களிடம் பணம் கொடுப்பதாக கூறிய தலைமை குரு, போலீசில் புகார் செய்ததை அடுத்து, மிரட்டிய மூன்று பேரையும், நேற்று முன்தினம் கைது செய்தனர்.உல்லாசமாக இருந்த சாமியார், மடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் இருந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment