Thursday, 23 May 2013

51% குடிநீர் மாதிரிகளில் கொடிய பாக்டீரியாக்கள்: இந்திய நுகர்வோர் சங்க ஆய்வில் தகவல்




தமிழகத்தில் 6 மாவட்டங்களில் குடிநீர் குறித்து நடத்திய ஆய்வில் 51 சதவீத குடிநீர் மாதிரிகளில் கொடிய பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய நுர்வோர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய நுர்வோர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உலகளவில் இந்தியாவின் மக்கள் தொகை 20 சதவீதம் ஆகும். ஆனால் இந்தியாவில் கிடைக்கும் நீரின் அளவோ 5 சதவீதம் மட்டும்தான். ஒவ்வொருவருக்கும் 50 லிட்டர் தண்ணீர் தேவை உலக சுகாதார நிறுவனத்தின் அளவுகோல் வைத்துள்ளது.
குடிநீரில் உள்ள உப்புத் தன்மை மற்றும் அவற்றில் இருக்கும் பாக்டீரியாக்கள் குறித்த ஆய்வை இந்திய நுகவோர்கள் சங்கம் சர்வதேச நுகர்வோர்கள் அமைப்புடன் இணைந்து மேற்கொண்டது.
 இந்த ஆய்வை 2012 ஆகஸ்ட் முதல் 2013 ஏப்ரல் வரை நடத்தினோம். 
சென்னை, திருச்சி, வேலூர், காஞ்சிபுரம், ஈரோடு, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த மாவட்டங்களில் உள்ள 18 இடங்களில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மாதிரியை கொண்டு வரச் செய்து அவர்கள் எதிரிலேயே சோதனைகள் நடத்தியதில் 44 சதவீத மாதிரிகளில் உலக சுகாதார நிறுவனத்தில் அளவைவிட அதிக அளவில் உப்ப கலந்திருந்தது.
இது தவிர 51 சதவீத மாதிரிகளில் கொடிய பாக்டீரியாக்கள் இருப்பதும் தெரிய வந்தது. மாதிரிகள் பெறப்பட்ட மக்களிடத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அவர்களிடத்தில் தண்ணீரை காய்ச்சி, வடிகட்டி பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், குடிநீர் பாத்திரங்களை சுத்தமாக வைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment