Tuesday, 28 May 2013

மதுவினால் மிருகமாகும் மனிதன்


புதுடில்லி: டில்லியில், 80 வயது மூதாட்டியை, மது போதையில், சொந்த பேரனே பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல், 8 மாத குழந்தையை பலாத்காரம் செய்த இளைஞன் தலைமறைவாகியுள்ளான். கிழக்கு டில்லியில் உள்ள, சீலம்பூர் பகுதியில், 35 வயது நபர், மது போதையில், தன் பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கும் மது அருந்தினார். இளைஞரின் பாட்டி, அவரை கண்டித்ததால், ஆத்திரத்தில், 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்தார்.

மூதாட்டி மயக்கமடைந்ததால், பேரன் அங்கிருந்து தப்பி சென்றான். பாட்டியின் அழுகுரல் கேட்ட அக்கம் பக்கத்தினர், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். பாட்டியின் உடல் நிலை மோசமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள பேரனை, போலீசார் தேடி வருகின்றனர். இதே போல், மத்திய டில்லி பகுதியான, நபி கரீம் பகுதியில், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த, எட்டு மாத குழந்தையை, 21 வயது இளைஞன், தன் வீட்டிற்கு அழைத்து சென்றான். சற்று நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்ட தாய், வீட்டு வாசலில், குழந்தை ரத்தக் காயங்களுடன், மோசமான நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், குழந்தை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது தெரிந்தது. காமுக இளைஞனை, போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment