கோவாவில் உள்ள பாண்டா பகுதியில் கோவாவில் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட 'பாம் ஜீஸஸ்' பேராலயம் உள்ளது. உலகின் புகழ் வாய்ந்த கலாசார அடையாளங்களை பட்டியலிட்டு பாதுகாக்கும் 'யுனெஸ்கோ' அமைப்பின் அங்கீகாரத்தை இந்த பேராலயம் பெற்றுள்ளது.
இந்த பேராலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபாசமாக உடையணிந்து வருவதாக நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து, ஆலயத்திற்குள் வரும் பெண்கள் ஒழுக்கமான முறையில் உடையணிந்து வரவேண்டும் என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.
இந்த அறிவிப்பால் எந்த பலனும் ஏற்படாததால் நிர்வாகிகள் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக, பேராலய பங்கு தந்தை சேவியோ பேரெட்டோ கூறுகையில், 'ஆலயதிற்கு வரும் பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் நீச்சல் உடைகளுடன் வருகின்றனர்.
இது இதர பக்தர்களின் கவனத்தை திசை திருப்புகிறது. இதனை தவிர்க்கும் வகையில் ஒழுங்கீனமான ஆடை அணிந்து வருபவர்களை நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்களுடைய அரைகுறை ஆடைகளை மறைக்கும் வகையில் ஆலயத்தின் சார்பில் சால்வை அளிக்கப்படும். சால்வையை போர்த்திக்கொண்டு உள்ளே வருபவர்கள் மட்டுமே ஆலயத்தினுள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆலய வளாகத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியேறும் போது நுழைவு வாயிலில் உள்ள ஊழியர்களிடம் அவர்கள் சால்வையை திருப்பித் தந்துவிட வேண்டும்' என்றார்.
இந்த ஆலயத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த புனித சவேரியாரின் உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment