அமெரிக்க முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டனை ஆபாசமாக விமர்சித்த வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த ஆண்டு லிபியாவின் பென்காசியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹிலாரி கிளிண்டனின் தவறான அணுகுமுறை தான் காரணம் என்று வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிட்டே சாண்டில்லி ஆபாசமாக அவரைப் பேசியுள்ளார்.
அதில், ஹிலாரியை கைது செய்து விசாரித்து ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும். அதுவும், என் கையால் நானே இந்த தண்டனையை தர வேண்டும். துப்பாக்கியால் சுட்டதும் ஹிலாரி உடனடியாக இறந்து விடக்கூடாது. வலியின் வேதனையை அவரது கண்களில் நான் பார்க்க வேண்டும்.
மரண வலியால் துடிக்கும் அவரது அருகில் சென்று உன்னால் கொல்லப்பட்ட எல்லா அமெரிக்கர்களின் சார்பாகவும், கடற்படை ‘சீல்’ வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் சார்பாகவும் உனக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று நான் கூற வேண்டும்.
இதே போன்ற தண்டனையை ஒபாமாவுக்கும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். பிட்டே சாண்டில்லியின் இந்த கருத்து அமெரிக்க அரசியல்வாதிகளிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment