Tuesday, 28 May 2013

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் காதை கடித்து குதறிய கணவன்

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் காதை கடித்து குதறிய தொழிலாளி கைது
காயல்பட்டினம் மங்களவாடியை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 44). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சங்கரம்மாள் (37). இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். சந்தனகுமாருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இதனால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டும் வந்தார்.

நேற்றிரவு சந்தனகுமார் வீட்டிற்கு வந்தார். அப்போது சங்கரம்மாள் வீட்டில் இல்லை. இதனால் மனைவி மீது கோபத்தில் இருந்தார். சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த சங்கரம்மாள் வீட்டிற்கு வந்தார். அப்போது சந்தனகுமார் மனைவியிடம் எங்கே சென்று வருகிறாய் என்று கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சந்தனகுமார் திடீரென மனைவியின் வலது காதை கடித்து குதறினார்.

இதில் காயமடைந்த அவர் காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோர் விசாரணை நடத்தி சந்தனகுமாரை தேடி வந்தனர். இன்று காலை காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment