Thursday, 30 May 2013

ரயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த டிக்கெட் பரிசோதகர்


சென்னை : ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆந்திர டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை ஜார்ஜ்டவுன் பகுதியை சேர்ந்தவர் அசோக் ஜெயின். அவரது மனைவி லாவண்யா ஜெயின் (26). (பெயர்கள் மாற்றம்). லாவண்யாவின் பெற்றோர் ஆந்திர மாநி லம் நெல்லூரில் உள்ளனர். அவர்களை பார்ப்பதற்காக 2 நாட்களுக்கு முன்பு நெல்லூர் சென்ற லாவ ண்யா நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில் நெல்லூரில் இருந்து ஷாலிமார்,சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார்.

முன்பதிவில்லா டிக் கெட்டை எடுத்திருந்த லாவண்யா முன்பதிவு பெட்டியில் ஏறி அங்கிருந்த பயணச்சீட்டு பரிசோதகரிடம் பணம் தருகிறேன் எனக்கு இடம் ஒதுக்கி தாருங்கள் என்று கூறியுள்ளார். அந்த பெட்டியில் இருந்த விஜயவாடாவை சேர்ந்த  பயணச்சீட்டு பரிசோதகர் ராமாராவ்(46) 2ம் வகுப்பு தூங்கும் வசதிப் பெட்டியில் இடம் ஒதுக்கி தந்துள்ளார். ஏசி பெட்டியில் இடம் ஒதுக்கி தரும்படி லாவண்யா மீண்டும் கேட்டுள்ளார். அவரும் 2 அடுக்கு ஏசி பெட்டியில் இடம் ஒதுக்கி தந் துள்ளார். அந்த இடத்தில் லாவண்யாவை தவிர வேறு யாரும் இல்லை. மேல் படுக்கையில் படுத்திருந்த லாவண்யா திரை சீலைகளை இறக்கிவிட்டுவிட்டு படுத்திருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து அங்கு சென்ற ராமாராவ், லாவண்யாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன லாவண்யா கழிவறைக்குள் சென்று புகுந்துக் கொண்டார். அங்கிருந்து சென்னையில் உள்ள தனது உறவினர் களை செல்போனில் தொடர்புக் கொள்ள முயன்றுள்ளார். ஆனால் செல்போனில் சார்ஜ் இல்லை. இதையடுத்து வெளியில் வந்த லாவ ண்யா, ஒரு பெண் பயணியிடம் செல்போனை வாங்கி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

ரயில் நேற்று முன்தினம் மாலை 6.10 மணிக்கு சென்ட்ரல் வந்த போது உறவினர்கள் ஏராளமானோர் ரயில்வே போலீசாருடன் காத்திருந்தனர். இந்த விவரம் தெரியாமல் ரயிலை விட்டு இறங்கிய ராமாராவை ரயில்வே  போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் கைது செய்தார். தொடர்ந்த விசாரணையில் ராமாராவ் குடித்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் டிஎஸ்பி பொன்ராம் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் ராமாராவ் மீது  பெண்களுக்கு எதிராக வன்கொடுமையில் ஈடுபட்டது, பாலியல் தொல்லை கொடுத்தது, பயணியிடம் அத்துமீறி நடந்துகொண்டது என 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அவர் உத்தரவின்படி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு புழல் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment