மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே நாளில் 9 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. அந்த குழந்தைகள் அனைத்தும் ஒரு வயதுக்கும் குறைந்தவை.
குழந்தைகள் இறந்தது தொடர்பாக தகவல் கிடைத்ததும், உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் ரஷித் கூறுகையில், ‘முன்கூட்டியே பிறந்தது, எடை குறைவு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக குழந்தைகள இறந்துள்ளன.
இது தொடர்பாக மால்டா தலைமை மருத்துவ அலுவலர் தலைமையில் 7 பேர் கொண்ட விசாரணைக்குழுவை மாவட்ட நீதிபதி அமைத்துள்ளார். இந்த விசாரணைக்குழு தனது அறிக்கையை அடுத்த 24 மணி நேரத்திற்குள் வழங்கும்' என்றார்.
இச்சம்பவத்தையடுத்து, குழந்தைகள் மருத்துவப் பிரிவுக்கு கூடுதலாக 35 படுக்கைகள் ஒதுக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment