கலவர மோதல்களை கட்டுப்படுத்தும் வகையில், திருப்பாச்சேத்தி வீச்சரிவாளுக்கு போலீஸ் டி.எஸ்.பி. வெள்ளத்துரை தடை விதித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள் ளது திருப்பாச்சேத்தி. இங்கு செய்யப்படும் அரிவாள், வீச்சரிவாள்கள் உலக அளவில் புகழ் வாய்ந்தவை ஆகும். ஆனால் சிலர், இதனை தவறாக பயன்படுத்த தொடங்கி உள்ளதாக மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு வெள்ளத்துரை தெரிவித்துள்ளார்.
சாதிக்கலவரங்களை தடுக்கும் வகையில், திருப்பாச்சேத்தியில் வீச்சரிவாள், வாள், கத்தி போன்ற ஆயுதங்கள் தயாரிக்க தடை விதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். விவசாயத்திற்கு பயன்படும் சாதாரண அரிவாள், பன்னரிவாள் தயாரிக்கலாம் என்றும், வன்முறைக்கு பயன்படுத்தும் ஆயுதங்களை மீறி தயாரிப்போர் ஆயுத தடை சட்டத்தில் கைது செய்யப்படுவர் என்று துணை சூப்பிரண்டு வெள்ளத்துரை கூறினார்.
No comments:
Post a Comment