பாராளுமன்ற தேர்தலில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை முன்னிலைப் படுத்தி பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் பாரதீய ஜனதாவில் ஒரு பிரிவினர் வற்புறுத்தி வருகிறார்கள்.
கட்சி மேலிடம் அவருக்கு பாராளுமன்ற குழுவில் உறுப்பினராக நியமித்தாலும் தேர்தலில் முன்னிலைப்படுத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்க வில்லை. நரேந்திரமோடிக்கு கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடம் இருந்தும் மறைமுக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பணிகள் மற்றும் பிரசார பொறுப்புகள் நரேந்திரமோடியிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சி தலைவர் ராஜ்நாத்சிங்குக்கு அத்வானி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் வரும் 5 மாநில சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக நிதின்கட்காரியை நியமிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளார்.
5 மாநில தேர்தலில் கட்சியின் பிரசாரத்தை வழிநடத்திச் செல்ல நிதின் கட்காரிதான் தகுதியானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிர்வாகிகள் நரேந்திரமோடியிடம் 5 மாநில தேர்தல் பொறுப்பை வழங்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
நிதின்கட்காரி தலைவராக இருந்த போது ஊழல் புகார் சுமத்தப்பட்டதால் பதவி விலகினார். என்றாலும் தற்போது அத்வானி சிபாரிசு செய்து இருப்பதை கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
No comments:
Post a Comment