Thursday, 30 May 2013

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு





பல்வால் : அரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில் உள்ளது அமர்பூர் கிராமம். இங்கு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. ஆனால், 200 அடி ஆழத்துக்கு போர்வெல் போட்ட பின்பு, அதை மூடாமல் வைத்திருந்தனர். நேற்று முன்தினம் மாலை கிராமத்தை சேர்ந்த பிபாஷா என்ற 4 வயது சிறுமி, ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டாள். உடனே, ராணுவத்தை சேர்ந்த மீட்புக்குழுவினர் ஆழ்துளை கிணற்றின் அருகே பெரிய பள்ளத்தை தோண்டினர். 

பின்பு சிறுமிக்கு வேண்டிய ஆக்சிஜன் குழாய் வழியாக உள்ளே செலுத்தப்பட்டது. நேற்று காலை சிறுமி இருந்த இடம் வரை மீட்புகுழுவினர் இயந்திரங்கள் மூலம் தோண்டி சென்றனர். பின்னர், அவள் உயிருடன் மீட்கப்பட்டாள். இதனால், மக்களும், பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments:

Post a Comment