Thursday, 23 May 2013

கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான பேயோட்டும் செயல்களில் ஈடுபட்ட போப்


வாடிகனில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனை முடிந்த பின்னர் ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
வாடிகன் நகரில், கடந்த ஞாயிறன்று நடைபெற்ற கூட்டுப்பிரார்த்தனை முடிந்த பின்னர், ஆலயத்தின் வாசலில் காத்திருந்த ஒரு மாற்றுதிறனாளியின் தலையை தொட்டு ஆசி வழங்கினார் போப் பிரான்சிஸ்.
அது பார்ப்பதற்கு அந்த நபரின் உடலில் இருந்து தீய சக்திகளை வெளியேற்றியது போல் இருந்ததாம். இதன் மூலம், போப் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான பேயோட்டும் செயல்களில் ஈடுபடுகின்றாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
ஆனால் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த மாற்றுதிறனாளியின் தலையை தொட்டு ஆசி தான் வழங்கினார் என்ற கருத்தும் நிலவுகிறது.

No comments:

Post a Comment