Tuesday, 28 May 2013

மறு வீட்டுக்கு வந்த புதுப்பெண் காதலனுடன் ஓட்டம்

நெல்லை
திருமணம் முடிந்த 4–வது நாளில் மறுவீட்டுக்கு வந்த புதுப்பெண், காதலனுடன் ஓட்டம் பிடித்தார். பின்னர் போலீஸ் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையின்போது தாலியை கழற்றி கணவரிடம் கொடுத்துவிட்டார்.
டிராக்டர் டிரைவர்
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சடையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், பெருமாள். அவருடைய மகள் திருமலைச் செல்வி (வயது 21). புளியங்குடி அருகே உள்ள புன்னையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர், செல்லத்துரை (38). டிராக்டர் டிரைவர்.
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், பிரபா என்ற மகளும், பாஸ்கர் என்ற மகனும் உள்ளனர். செல்லத்துரை ஊர், ஊராக சென்று வயல் வேலைக்கு டிராக்டர் ஓட்டும் தொழில் செய்து வந்தார்.
காதலில் விழுந்தனர்
சில ஆண்டுகளுக்கு முன்பு சடையப்பபுரம் கிராமத்தில் அவர் டிராக்டர் ஓட்டினார். அப்போது, விவசாய கூலி வேலைக்கு திருமலைச்செல்வியும் சென்று இருந்தார். அப்போது டிராக்டர் டிரைவர் செல்லத்துரையும், திருமலைச்செல்வியும் சந்தித்துக்கொண்டனர். பின்னர் அவர்கள் அடிக்கடி சந்தித்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
ஆரம்பத்தில் திருமணமாகாதவர் என்று கூறி திருமலைச்செல்வியுடன் பழகினார். இந்த பழக்கத்தால் செல்லத்துரை மீது திருமலைச்செல்வி காதல் வயப்பட்டார். இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். செல்லத்துரையை உயிருக்கு உயிராக நேசித்தார். வீட்டுக்கு தெரியாமல் இருவரும் ஊர் சுற்றியதாகவும் கூறப்படுகிறது.
பெற்றோர் எச்சரிக்கை
நாளடைவில் செல்லத்துரை ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகளுக்கு தந்தையானவர் என்ற விவரம் திருமலைச்செல்விக்கு தெரியவந்தது. இருந்தாலும் செல்லத்துரையுடன் தொடர்ந்து பழகினார். அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
திருமணமானவரை மகள் காதலிப்பதை அறிந்து அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். திருமலைச்செல்வியை கண்டித்தனர். செல்லத்துரை மீதான காதலை கைவிடும்படி எச்சரித்தனர். ஆனால், அவர் மறுத்துவிட்டார். 3 ஆண்டுகளாக அவர்களுடைய காதல் தொடர்ந்தது.
திருமணம் நடந்தது
இதனால் திருமலைச்செல்விக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் முடிவு செய்தனர். செல்லத்துரையின் சொந்த ஊரான புன்னையாபுரத்தை சேர்ந்த பலவேசம் (24) என்பவருக்கும், திருமலைச்செல்விக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது.
 திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்பு திருமலைச்செல்வியுடன், பேசுவதை செல்லத்துரை குறைத்துக்கொண்டார். ஆனால், காதலியை விட்டு முழுவதுமாக அவர் ஒதுங்கி விடவில்லை. கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமலைச்செல்விக்கும், பலவேசத்துக்கும் திருமணம் நடந்தது. கணவருடன் 3 நாட்கள் குடித்தனம் நடத்தினார்.
மறுவீட்டுக்கு
பின்னர் புதுமணத்தம்பதியை மறு வீட்டுக்கு திருமலைச்செல்வியின் பெற்றோர் அழைத்து வந்தனர். காதலியை பிரிந்த வருத்தத்தில் இருந்த செல்லத்துரைக்கு இந்த தகவல் தெரியவந்தது. ரகசியமாக வந்து திருமலைச்செல்வியை சந்தித்தார்.
அப்போது விட்டுப்போன காதல் இருவரிடமும் துளிர்த்தது. புதிதாக கிடைத்த கணவரை விட; ஏற்கனவே திருமணமானவரான செல்லத்துரையுடன் வாழ்க்கையை தொடருவது என்ற முடிவுக்கு திருமலைச்செல்வி வந்தார்.
காதலனுடன் திருமணம்
மனைவி, பிள்ளைகளின் நிலைமையைப்பற்றி கவலைப்படாமல் திருமலைச்செல்வி கிடைத்தால் போதும் என்ற முடிவுக்கு செல்லத்துரையும் வந்தார். 2 பேரும் அங்கிருந்து மாயமாகி விட்டார்கள். மறுவீட்டுக்கு வந்த இடத்தில் திருமலைச்செல்வி மாயமானதை அறிந்து அவருடைய குடும்பத்தினரும், புதுமாப்பிள்ளை பலவேசமும் அதிர்ச்சி அடைந்தனர்.
பல இடங்களில் தேடிய பின்னரும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர்தான் செல்லத்துரையுடன் அவர் சென்றுவிட்டது தெரியவந்தது. ஓடிப்போன 2 பேரும் தென்காசியில் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்ட விவரமும் தெரியவந்தது.
போலீஸ் நிலையத்தில்....
இதனால் பலவேசத்தின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். அதே போல் செல்லத்துரை மீது திருமலைச்செல்வியின் குடும்பத்தினரும் ஆத்திரம் அடைந்தனர். இந்த பிரச்சினை பாவூர்சத்திரம் போலீஸ் நிலையம் வரை சென்றது.
போலீசார் செல்லத்துரை, திருமலைச்செல்வி ஆகியோரையும், 2 ஊர்க்காரர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காதலனை விட்டு விட்டு கட்டிய கணவரை ஏற்றுக் கொண்டு வாழ்க்கை நடத்தும்படி உறவினர்களும், பெற்றோரும் திருமலைச்செல்விக்கு புத்திமதி கூறினார்கள்.
குழந்தைகள் கதறல்
செல்லத்துரையின் பிள்ளைகள் 2 பேரும், போலீஸ் நிலையத்துக்கு வந்து தங்களுடன் வந்துவிடும்படி தந்தையை அழைத்து கதறி அழுதனர். இந்த காட்சி மற்றவர்களை உருகச்செய்ததே தவிர, செல்லத்துரை எதற்கும் அசரவில்லை.
‘காதலியோடுதான் வாழ்வேன்’ என்று பிடிவாதமாக கூறிவிட்டார். திருமலைச்செல்வியும் காதலனோடு வாழ்வதில் உறுதியாக இருந்தார். வேறு வழி இல்லாததால் காதலனோடு மனைவியை அனுப்பி வைக்கும் முடிவுக்கு பலவேசமும் வர வேண்டியதாயிற்று.
தாலியை கழற்றி கொடுத்தார்
முதல் கணவர் பலவேசம் கட்டிய தாலியை திருமலைச்செல்வி அவரிடமே கழற்றி கொடுத்துவிட்டார். திருமணத்துக்கு செலவு செய்த தொகையை பெண் வீட்டார் தந்து விட வேண்டும் என்று பலவேசம் தரப்பினர் கேட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த செலவுத்தொகையை கொடுத்துவிடுவதாக அவர்களும் தெரிவித்தனர்.
திருமணத்தின் போது திருமலைச்செல்விக்கு போட்ட தங்க நகைகள், சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை அவருடைய பெற்றோர் திரும்ப வாங்கிக்கொண்டனர்.
ஜோடியாக சென்றனர்
நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தன்னுடைய சொத்துக்களை மூத்த மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் எழுதி வைக்க செல்லத்துரை சம்மதித்தார். அதன் பின்னர் திருமலைச்செல்வியும், செல்லத்துரையும் போலீஸ் நிலையத்தை விட்டு ஜோடியாக சென்று விட்டனர்.

No comments:

Post a Comment