Tuesday, 28 May 2013

போஷாக்கின்மையால் பிள்ளைகளுக்கு கல்வித் திறன் பாதிக்கப்படும் ஆபத்து

ஊட்டச்சத்து கிடைக்காத சொமாலிய பிள்ளை ஒன்று
உலகின் குழந்தைகளில் கால்வாசிப் பேருக்கு வருடக்கணக்கில் போதிய ஊட்டச்சத்து கிடைக்காத காரணத்தால் அவர்கள் பள்ளிக்கூடத்தில் நன்றாக படிக்க முடியாமல் போகும் ஆபத்து உள்ளது என பிரிட்டனின் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தியுள்ள புதியதோர் ஆய்வு எச்சரிக்கிறது.
ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத பிள்ளைகளுக்கு எழுதவும் படிக்கவுமான கல்வித் திறன் மோசமாகப் பாதிக்கப்படலாம் என சேவ் த சில்ரன் என்ற இந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிற்பாடு சரிசெய்துவிட முடியாத பாதிப்பு ஏற்படுகிறது; ஏனென்றால் அவர்கள் வளர்ச்சியும் வலுவும் குன்றியவர்களாக இருப்பார்கள்; அவர்களது மூளையும் முழுமையான வளர்ச்சி அடையாமல் போகலாம் என இந்த ஆய்வு காட்டுகிறது.
அடுத்த மாதம் நடக்கவுள்ள உலகின் முதல் எட்டு பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட 'ஜி8' மாநாட்டில் போஷாக்கின்மையை ஒழிப்பதென்பதற்கு முன்னுரிமை தந்து திட்டங்கள் வகுக்க வேண்டும் என சேவ் த சில்ரன் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியா, எத்தியோப்பியா, பெரூ, வியட்நாம் போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான பிள்ளைகளிடையே ஆய்வு நடத்தி இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment