Thursday, 30 May 2013

9 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம்


சென்னை: 10ஆம் வகுப்பு தேர்வில் 9 பேர் 498/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றனர். முதலிடம் பிடித்தவர்களின் பெயர் மற்றும் விவரம் : அனுஷா(கொங்குவோளாளர் பள்ளி, பெருந்துறை), தீப்தி(பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை), காயத்ரி(மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி), மர்சியா ஷெரீன்(மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி), பொன் சிவசங்கரி(இ.எச்.கே.என். பள்ளி, பாளையம், ஈரோடு), சாருமதி(சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்), சோனியா(எஸ்.ஜே.எஸ். ஜூப் மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி), ஸ்ரீதுர்கா(வீனஸ் மெட்ரிக் பள்ளி, சிதம்பரம்), வினுஷா(ஆக்சிலியம் பள்ளி, வேலூர்).  முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

52 பேர் மாநில அளவில் 2வது இடம்

52 பேர் 497/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2வது இடம் பிடித்துள்ளனர். 

136 பேர் மாநில அளவில் 3வது இடம்

136 பேர் 496/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3வது இடம் பிடித்துள்ளனர். 

10ஆம் வகுப்பு தேர்வில் 89% பேர் தேர்ச்சி

இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வில் 89% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 86%ம் மாணவர்களும், 92%ம் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3% பேர் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

குமரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம்

10ஆம் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் 97.29% தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் 95.42% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2வது இடத்தையும், ஈரோடு மாவட்டம் 95.36% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3வது இடத்தையும் பெற்றுள்ளது.

100/100 மதிப்பெண் பெற்றவர்களின் விவரம்

கணித பாடத்தில் 29,905 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 38,154 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 19,860 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 

பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடந்தது. 10 லட்சத்து 69 ஆயிரத்து 500 பேர் எழுதினர். தனி தேர்வர்களாக 70 ஆயிரத்து 233 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.15 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் வெளியானது. 

மாணவர்கள் தங்களின் தேர்வு பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதற்காக  

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in 

ஆகிய இணைய தளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையம், மாவட்ட கிளை நூலகங்கள் ஆகியவற்றில் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவு களை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதிப்பெண் பட்டியல்கள் ஜூன் 20ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். தனி தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் குறித்து மறுகூட்டல் செய்ய ஆன்லைன் முறை யில் விண்ணப்பித்து தெரிந்து கொள்ள முடியும். இதற்காக www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தை பயன்படுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 7 முதல் 10ம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment