Thursday, 23 May 2013

சம்பாதித்து, மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான், கணவர்களின் கடமை .மும்பை ஐகோர்ட்



சம்பாதித்து, மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான், கணவர்களின் கடமை. அதைச் செய்யத் தவறிய கணவன், தன் மனைவிக்கு பராமரிப்பு செலவுக்கான தொகையை கொடுத்து தான் ஆக வேண்டும்,'' என, மும்பை ஐகோர்ட் நீதிபதி, எம்.எல்.தகிலியானி உத்தரவிட்டுள்ளார்.
மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான் கணவரின் கடமை. சம்பாதிக்காமல் இருப்பதும், வேலையில்லாமல் இருப்பதும், மனைவியின் குற்றமல்ல; கணவனின் குற்றம். இதற்காக, தகுந்த வேலை பார்ப்பது, கணவனின் பொறுப்பு. அதை, மகேஷ் செய்யத் தவறிவிட்டார்.எனவே, குடும்ப நல கோர்ட் உத்தரவிட்டபடி, சசிக்கு, மாதம், 1,500 ரூபாயும், அவர்களின் குழந்தைக்கு, மாதம், 1,000 ரூபாயும் பராமரிப்பு செலவாக கொடுக்க வேண்டும். இந்தத் தொகையை, 2012ம் ஆண்டிலிருந்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி தன் உத்தரவில் கூறியிருந்தார்.

பெண்களின் நிர்வாகிகளாக ஆண்களே இருக்கின்றனர். ஏனெனில் அவர்களில் ஒருவரைவிட மற்றவரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கின்றான். அன்றி (ஆண்களாகிய) அவர்கள் தங்கள் பொருள்களைப் பெண்களுக்காகச் செலவிடுகின்றனர். ஆகவே நல்லொழுக்கமுள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டுமென அல்லாஹ் விரும்புவனவற்றை (தங்களையும், தங்கள் கணவனின் ஏனையப் பொருட்களையும்) பேணிக்காத்துக் கொள்வார்கள். அல்குர் ஆன் 4 :34

கணவன், மனைவி இடையே உள்ள உரிமைகள். கணவன், மனைவி இடையேயும் பரஸ்பரம் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள் உள்ளன என்பதை ஒரு முஸ்லிம் எற்றுக் கொள்ள வேண்டும். அவை அவர்கள் ஒவ்வொருக்கும் மற்றவரின் மீதுள்ள உரிமைகளாகும் அல்லாஹ் கூறுகிறான்: மனைவியர் மீது கணவர்களுக்குள்ள உரிமைகள்போல முறைப்படி கணவர்கள் மீது மனைவியருக்கும் உரிமைகள் உள்ளன. ஆயினும் ஆண்களுக்குப் பெண்களைவிட ஒருபடி உயர்வு உண்டு. (அல்குர்ஆன்: 2:228)

No comments:

Post a Comment