Thursday, 23 May 2013

என் புருஷன் குழந்தை மாதிரி...: டென்ஷனில் அமெரிக்கப் பெண்கள்


லண்டன்: உங்களுக்கு எது டென்ஷன் அதிகம் தருகிறது என்று அமெரிக்கப் பெண்களிடம் கேட்டால்.. என்னோட புருஷன்தாங்க என்பதுதான் அவர்களது பதிலாக இருக்கிறதாம். குழந்தைகளை விட இந்த புருஷன்மார்களை சமாளிப்பதுதான் பெரும் டென்ஷன் பிடித்த வேலை என்பது இப்பெண்களின் கவலையாக இருக்கிறதாம். சின்னக் குழந்தைகளைக் கூட எளிதில் சமாளித்து விட முடிகிறது. ஆனால் இந்த பெரிய குழந்தைங்க படுத்தும் பாடுதான், ரொம்பக் கஷ்டமப்பா என்று அலுத்துக் கொள்கிறார்கள் அமெரிக்கத் தாய்மார்கள்.டுடே மாம்ஸ் என்ற நிறுவனம் எடுத்த சர்வேயில்தான் இந்த கருத்து வெளிப்பட்டுள்ளது. மொத்தம் 7000 தாய்மார்களிடம் இதுதொடர்பாக கேள்வி கேட்டு கருத்தைப் பெற்று வெளியிட்டுள்ளனர்.இதில் கருத்து தெரிவித்தவர்களில் 46 சதவீதம் பெண்களுக்கு குழந்தைகளை விட கணவர்களை சமாளிப்பதே கஷ்டமான காரியம் என்று சொல்லியுள்ளனராம்.பல பெண்கள் சொல்லும் பொதுவான புகார், தங்களுக்கு கணவர்கள் சின்னச் சின்ன உதவியைக் கூட செய்வதில்லை என்பதுதானாம். வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வது கிடையாது என்பது இவர்கள் அலுத்துக் கொள்கிறார்கள். தாங்கள் படும் பாட்டை பார்த்து கணவர்களும் ரசிப்பதாக பல தாய்மார்கள் அலுத்துக் கொண்டனராம்.பல பெண்கள், தங்களுக்கு கணவர்கள் இன்னொரு குழந்தை போலத்தான். அப்படித்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்று செல்லமாக கூறுகிறார்கள்.மூன்றில் ஒரு பங்குப் பேர் வீட்டு வேலைகளை தாங்களே செய்வதாகவும், கணவர்கள் உதவுவதில்லை என்றும் கூறியுள்ளனர்.
பல பெண்களுக்கு தாங்கள் தாயானதை விட அதிக டென்ஷன் தருவது, மனைவியாக இருப்பது என்று கூறியுள்ளனர். தங்களுக்கு கணவர்கள் உதவ வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனராம்.தங்களது கணவர்கள் குழந்தை போல நடந்து கொள்வதைப் பார்க்கும்போது கடுப்பாக வருகிறது என்று கூறுகிறார்கள் பல பெண்கள







No comments:

Post a Comment