காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில், மனைவியை துன்புறுத்தியதாக ஆனந்த் சித்தார்த் என்ற ராணுவ அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இவரது மனைவிக்கு சோதனை குழாய் மூலம் சமீபத்தில் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தை ஊனமாக பிறந்ததால், ஆனந்த் சித்தார்த் மனைவியை துன்புறுத்தி அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த பெண்ணின் தந்தை கோர்ட்டின் உதவியை நாடினார்.
இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததால், ராணுவ அதிகாரி ஆனந்த் சித்தார்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment