கல் உடைக்கும் மெஷினில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று ஆபரேஷன் செய்து போலந்து டாக்டர்கள் சாதனை
போலந்து நாட்டின் ரஸ்லா பகுதியை சேர்ந்தவர் கிரஸ்கோர்ஸ் (33). கல் உடைக்கும் ஆலையில் வேலைசெய்யும்போது, எதிர்பாராதவிதத்தில் அவருடைய முகத்தை டிரில்லிங்கி மெஷினின் கூரிய முனைகள் பதம் பார்த்தன.
முகம் சின்னாபின்னமாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
உடனடியாக க்ளிவைஸ் நகரில் உள்ள கேன்சர் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையத்துக்கு கொண்டு வரப்பட்டார்.
வேறொருவரின் முக தோலை பொருத்தி முகம் மாற்று ஆபரேஷன் செய்தால் மட்டுமே அவரை பிழைக்க வைக்க முடியும் என்ற நிலை உருவானது.
புதிய முகத்தை’ ஒரு போர்வை போல கிரஸ்கோர்சின் முகத்தில் டாக்டர்கள் பொருத்தி தையல் போட்டனர். 27 மணி நேரம் ஆபரேஷன் நடந்தது.
ஆபரேஷன் டீம் தலைவர் ஆடம் மேசிஜெஸ்கி தலைமையில் இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிர் காக்கும் சிகிச்சையாக, விபத்து நடந்த மூன்றே வாரத்தில் முகத்தை மாற்றியது உலக சாதனையாக கருதப்படுகிறது.
வென்டிலேட்டர் உதவியில்லாமல் தானாக மூச்சு விடுகிறார். தலை, கையை அசைக்கிறார். 8 மாதத்தில் அவரது புதிய முகம் முழு இயக்கமும் பெற்றுவிடும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment