மும்பை:இளம் பெண்ணின் மொபைல் போனுக்கு அடிக்கடி போன் செய்து, பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை, அந்தப் பெண் போலீசில் சிக்க வைத்தார். முன்னதாக, அந்த இளைஞனை தன் தோழிகளுடன் சேர்ந்து, ரயில்வே ஸ்டேஷனில், அந்தப் பெண் துவைத்து எடுத்தார்.
ஆபாசமாக பேசி...மும்பை தாராவியில் மொபைல் போன் கடை வைத்திருப்பவன் மிதிலேஷ் திவாரி, 30. தற்செயலாக ஒரு எண்ணுக்கு போன் செய்த போது, எதிர் முனையில் போனை எடுத்த இளம்பெண்ணிடம், தவறாக பேசியுள்ளான்; அந்தப் பெண், அவனை திட்டி, போனை வைத்து விட்டார்.எனினும், விடாமல் தொடர்ந்து, பல முறை, ஆபாசமாக பேசி தொந்தரவு செய்துள்ளான். அவனின் ஜொள்ளுப் பேச்”, பல நாட்களுக்குத் தொடர்ந்ததால், அந்தப் பெண் வேதனை அடைந்தார்.
அவனை போலீசில் பிடித்துக் கொடுக்க முடிவு செய்த அப்பெண், தன்னை சந்திக்க வேண்டுமானால், குர்லா ரயில்வே ஸ்டேஷனுக்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு வருமாறு கூறினாள். அடையாளம் காண்பதற்காக, தான் அணிந்துள்ள ஆடையின் நிறத்தையும் கூறினார்.இதை உண்மை என, நம்பிய ஜொள்ளு வாலிபன் மிதிலேஷ், டிப்-டாப்பாக டிரஸ் செய்து கொண்டு, கல்யாண மாப்பிள்ளை போல, ரயில்வே ஸ்டேஷன் வந்திறங்கினான்.
அங்கு இருந்த போலீசாரிடம், அந்தப் பெண் முன்னதாக கூறி வைத்திருந்ததன் அடிப்படையில், அவர்கள் மறைந்தி ருந்தனர். மின்னல் வேகத்தில் வந்திறங்கிய மிதிலேஷ், அடுத்த சில நிமிடங்களில், அந்தப் பெண்ணை கண்டுபிடித்து விட்டான். பெண்ணை நெருங்கி, "வாங்க ஓட்டலுக்கு போகலாம்' என அழைத்து, கையை பிடித்து இழுத்தது தான் தாமதம்.
கைது:அழகான ராட்சசியாக மாறிய அந்தப் பெண், அவனை துவைத்து எடுத்து விட்டார். அவருடன் வந்திருந்த தோழிகளும், அவனுக்கு, செமவிருந்து கொடுத்தனர். தப்பி ஓட முயன்றவனை, போலீசார் கைது செய்தனர்."பெண்களை தொந்தரவு செய்யும், இத்தகைய ஜொள்ளு பார்ட்டிகளுக்கு, இது தான் சரியான தண்டனை' என, பெண் பயணிகள் பலரும், அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக பேசியதுடன், தங்கள் பங்குக்கு, சில குத்துகளை, மிதிலேஷûக்கு கொடுக்கத் தவறவில்லை.
No comments:
Post a Comment