Tuesday, 28 May 2013

மும்பை நகரில் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்

மும்பை நகரில் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்: கணக்கெடுப்பில் தகவல்
மும்பையில் 2012-ம் ஆண்டு நடந்த இறப்புகள் குறித்த புள்ளி விவரங்களை மும்பை நகராட்சி நேற்று வெளியிட்டது. இதில் சாலை விபத்து, தீ விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மும்பை நகரில் மாரடைப்பு காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

2012-ம் ஆண்டு மும்பை நகரில் இறந்தவர்களில் இதய நோய் மற்றும் மாரடைப்பு காரணங்களால் மட்டும் 25 ஆயிரத்து 474 பேர் உயிரிழந்துள்ளனர். இது மற்ற இறப்புக்களை விட அதிகம் என்று மும்பை மாநகராட்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

மாரடைப்பு உயிரிழப்பை தவிர்க்க விழிப்புணர்வு பிரச்சாரம் மும்பை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஓரளவு பலன் கிடைத்திருப்பதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. 

இது தவிர, மும்பையில் 2012 ஆண்டும் இறந்தவர்களில் 14 பேரில் ஒருவர் விபத்து காரணமாக உயிரிழந்ததாகவும்  மும்பை நகராட்சி தெரிவித்துள்ளது. அந்த ஆண்டு மட்டும் விபத்தில் 6 ஆயிரத்து 164 பேர் உயிரிழநதுள்ளனர்.

No comments:

Post a Comment