Thursday, 23 May 2013

கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் திராவகம் குடித்து இளம்பெண்



கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் விரக்தி அடைந்த இளம்பெண் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
கொடுங்கையூர் சுசிலா நகரை சேர்ந்தவர் ஜம்பு(வயது 24). இவர், கொருக்குப்பேட்டையில் உள்ள வெள்ளி பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஷைரா பானு(22).
இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தர்ஷினி(3½) என்ற மகளும், ஹரிஷ்(1½) என்ற மகனும் உள்ளனர்.
கள்ளக்காதல்
ஜம்புவின் சித்தி மகன் ஸ்ரீதர்(22). இவர், ஜம்புவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து ஷைரா பானுவுடன் சிரித்து பேசி பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் ஸ்ரீதருக்கும்–ஷைரா பானுவுக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
இவர்களின் கள்ளக்காதல் பற்றி அறிந்த ஜம்பு, தனது மனைவியை கடுமையாக கண்டித்தார். நேற்று  இந்த கள்ளக்காதல் தொடர்பாக கணவன்–மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜம்பு, காதல் மனைவி ஷைரா பானுவை அடித்து உதைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
தற்கொலை
இதனால் வீட்டில் தனியாக இருந்த ஷைரா பானு, தனது கள்ளக்காதல் விவகாரம் அறிந்து கணவர் கண்டித்ததால் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த திராவகத்தை எடுத்து குடித்து விட்டார்.
அதனால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் நேற்று காலை சிகிச்சை பலனின்றி ஷைரா பானு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment