கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகளால் பல்வேறு இடங்களில் சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
வாசல்கோட்டை மாவட்டம் ஜமான்பு தாலுகாவில் மதவைப்பட்டி கிராமத்தை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் முத்தண்ணா திருமணம் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த உறவினர்கள் கலந்து கொண்டனர்.
திருமணம் நடந்து கொண்டு இருக்கும்போது உறவினர்கள் அரசியல் நிலவரம் குறித்து பேசிக்கொண்டி இருந்தனர். சாதாரணமாக தொடங்கிய இந்த விவாதம் திடீரென மோதலாக உருவெடுத்தது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். மேலும் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு ரகளையில் ஈடுபட்டனர். மண்டபத்தில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன.
இந்த ரகளையில் 30 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு ரகளை செய்ததால் யாருக்கும் குண்டு காயம் ஏற்படவில்லை. இந்த மோதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் திருமண மண்டபத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த மோதல் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment