உறவுக்குள் திருமணம் செய்வதால் காது கேளாத குழந்தைகள் பிறக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. சென்னை இஎன்டி ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 10 ஆண்டுகளாக முகாம்கள் நடத்தி குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு ஆய்வு நடத்தப்பட்டது.
சென்னை இஎன்டி ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை இஎன்டி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் ஆய்வு முடிவுகளை வெளி யிட்டு, அளித்த பேட்டி:
இந்த ஆய்வில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிசோதனை செய்யப்பட்டன. இவற்றில் 1000 குழந்தைகளில் 6 குழந்தைகளுக்கு (0.6 சதவீதம்) முழுமையாக காது கேட்கவில்லை. தேசிய மற்றும் சர்வதேச அளவைவிட தமிழகத்தில் செவித்திறன் குறைபாட்டுடன் குழந்தைகள் அதிகமாக பிறக்கிறது.
இதற்கு உறவுமுறையில் திருமணம் செய்வதே முக்கிய காரணமாகும். உறவுமுறையில் திருமணம் செய்வதால், உடலில் பல்வேறு குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கிறது. இவற்றில் அதிகமாக செவித்திறன் குறைபாடுகளுடன் குழந்தைகள் அதிகமாக பிறக்கின்றது என்றனர்.
No comments:
Post a Comment