ஆந்திரமாநிலம்
மகபூப் நகர் மாவட்டம் அச்சம் பேட்டையைச் சேர்ந்தவர் கமலா (பெயர்
மாற்றப்பட்டது). இவர் ஐதராபாத் மதுரா நகரில் சாலையோர குடிசையில் கணவருடன்
வசித்து வந்தார். அங்குள்ள வீடுகளில் வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.
கமலா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று கமலா வீட்டில் தனியாக இருந்த
போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். வீட்டு வேலைக்கு 2
பெண்கள் தேவை என்று அழைத்தார்.
இதையடுத்து
கமலாவும், பக்கத்து வீட்டில் வசிக்கும் சுந்தரியும் அந்த வாலிபருடன் செல்ல
தயாரானார்கள். அந்த வாலிபர் வந்த மோட்டார் சைக்கிளிலேயே 2 பெண்களும்
ஏறினர். மோட்டார் சைக்கிளில் வாலிபரின் பின்னால் கமலாவும், அவருக்கு
பின்னால் சுந்தரியும் அமர்ந்து பயணம் செய்தனர். பாலாஜிநகர் அருகே சென்ற
போது மோட்டார் சைக்கிளை நிறுத்திய வாலிபர் பின்னால் இருந்த சுந்தரியை இறங்க
சொன்னார்.
சுந்தரி
இறங்கியதும் கமலாவுடன் அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் பறந்தார். அங்குள்ள
மைதானத்துக்கு கமலாவை அழைத்துச் சென்று அங்கு பாலியல் பலாத்கார சம்பத்தில்
ஈடுபட்டுள்ளார்.. மேலும் செல்போனில் தொடர்பு கொண்டு தனது நண்பர்கள் 2 பேரை
வர வழைத்தார். அவர்களும் நல்லம்மாளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் கமலாவை அங்கேயே விட்டு விட்டு 3 பேரும் தப்பி விட்டனர். மறுநாள்
காலை கமலா தட்டுத்தடுமாறி வீடு வந்து சேர்ந்தார்.
நடந்த
விவரத்தை கணவரிடம் கூறினார். இது குறித்து குஷாயிகுடா போலீசில் புகார்
செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பேரை
பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment