நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கன்னி பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு படித்து வரும் 8வயது சிறுமி, சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தாள்.
இதனை சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்துவரும் திருமணமான வாலிபரான பொய்யாழி(வயது26) என்பவர் பார்த்தார். அவர் திடீரென சிறுமி வீட்டுக்குள் புகுந்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய தனது பெற்றோரிடம் சிறுமி கூறினாள். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, இதுகுறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி பொய்யாழியை கைது செய்தனர். பொய்யாழிக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் திருமணமாகி உள்ளது. தலைப்பிரசவத்திற்காக அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது.
மனைவி பிரசவத்திற்கு சென்று விட்டதால் தனியாக வசித்து வந்த பொய்யாழி பக்கத்து வீட்டு சிறுமியிடம் அத்துமீறி உள்ளார்.
No comments:
Post a Comment