ஹோமோஃபோபியா என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வெறுப்புணர்வு பற்றி ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது.
இதில் பங்கேற்ற ஒருபால் உறவுக்காரர்கள் கால்வாசிப் பேர் தாம் இவ்வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகக் கூறுகின்றனர்.
சுமார் 93 ஆயிரம் பேரிடம் விசாரித்து அடிப்படை உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய கழகம் இந்த ஆய்வை நடத்தியது.
தம்முடைய பாலியல் விருப்பத் தெரிவுக்காக பாரபட்சத்தை எதிர்கொள்ளும் கஷ்டம் ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவ்வகையான தாக்குதலுக்கு உள்ளான ஒருபால் உறவுக்காரர்கள் பலர் தாம் அது பற்றி பொலிஸில் சொல்வதில்லை என்று கூறியுள்ளனர்.
புகார் சொல்வதால் எதுவும் நடக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவுகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பிரிவினர் மீதான வெறுப்புணர்வு தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமான ஐரோப்பிய ஒன்றியக் கொள்கைகளை நிபுணர்கள் வகுக்கவுள்ளனர்.
No comments:
Post a Comment