பாரிஸ் நகர் பேருந்துகளில், ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் முந்நூறு யூரோ பிக்பாக்கெட்டுகளை அடித்துக் கொண்டு வந்து தரும்படி சிறுவர், சிறுமிகளைக் கொடுமைப்படுத்திய திருட்டுக் கூட்டத்தின் தலைவனுக்கு ஏழாண்டுச் சிறைத்தண்டனை கிடைத்துள்ளது.
மெட்ரோ ரயிலில் நடைபெற்ற 75 சதவீதம் திருட்டுக்கு இவரே பொறுப்பாவர் என்று மாநகர் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தத் திருட்டுக் குழுவில் சிறுமிகளும் உண்டு.
இவர்களுக்கு இலக்கு விதிக்கப்படுகிறது. இலக்கை அடையாவிட்டால் அடி, உதை, சிகரெட்டால் சூடு வைத்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படுகிறது.
தற்போது இக்குழுவைச் சேர்ந்த 20 பேர் சிறையில் ஓராண்டு முதல் ஐந்தாண்டு வரை சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
கடந்த 2010ம் ஆண்டில் பிடிபட்ட இக்குழுவினரால், கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் பாரிஸ் நகரில் 1.3 மில்லியன் யூரோ பணம் திருடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment